ஓலா பைக் கழுதையில் ஊர்வலம்!

Filed under: இந்தியா |

மகாராஷ்டிர மாநிலத்தில் ஓலா பைக் வாங்கி வெறும் ஆறு நாட்களே ஆனதை அடுத்து அந்த பைக்கை கழுதையில் கட்டி ஊர்வலம் எடுத்துச் சென்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சில நாட்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓலா பைக்கை வாங்கியுள்ளார். அவர் வாங்கிய 6 நாட்களில் அந்த பைக் ரிப்பேர் ஆகிவிட்டது. இதனையடுத்து அவர் சர்வீஸ் சென்டருக்கு புகார் அளித்துள்ளார். ஆனால் அந்நிறுவனத்திடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லையாம்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த அந்த நபர் அவர் வாங்கிய பைக்கை கழுதையில் கட்டி சாலையில் ஊர்வலமாக எடுத்துச் சென்றார். இதுகுறித்து புகைப்படங்கள் வீடியோக்கள் சமூகவலைதளத்தில் பரவி வைரலானதை அடுத்து ஓலா நிறுவனம் உடனடியாக சர்வீஸ் இன்ஜினியரை அனுப்பி வைத்துள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.