கக்கன் மகனுக்கு முதலமைச்சர் இரங்கல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

கக்கன் அவர்களின் 3வது மகன் சத்தியநாதனின் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கலை தெரிவித்துள்ளார்.

1957 முதல் 1967 வரை தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் தலைமையிலான அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமைச்சராகப் பதவிவகித்தவர் அமைச்சர் கக்கன். இவர் அரசியலிலும், பொதுவாழ்க்கையிலும் நேர்மையாக செயல்பட்டதற்காக இன்றளவும் எல்லோராலும் போற்றப்படுகிறார். இவரது 3வது மகன் சத்தியநாதன் அரசு மருத்துவராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சென்னையில் காலனியில் வசித்து வந்த அவர்,  தன் வீட்டில் வழுக்கி விழந்து உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். முதலமைச்சர் முக.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் “தமிழ்நாட்டின் முன்னாள் அமைச்சரும், அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கைக்கு அடையாளமாகத் திகழ்ந்தவருமான கக்கன் அவர்களது மகன் மருத்துவர் சத்தியநாதனின் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் மனவருத்தமடைந்தேன். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.