கச்சேரியிலிருந்து வெளியேறிய ஏ.ஆர்.ரஹ்மான்!

Filed under: இந்தியா,சினிமா |

புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

தற்போது அதிகளவில் தமிழ் படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது “மாமன்னன்” உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வரும் அவர், வரிசையாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இசைக் கச்சேரி நடத்தி வருகிறார். அவ்வகையில் நேற்று பூனேவில் அவரின் இசைக் கச்சேரி நடந்தது. இரவு 10 மணி வரையிலும் கச்சேரி நடத்த அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால் அதை தாண்டியும் கச்சேரி நடந்ததால் போலீசார் தரப்பில் மேடையேறி கச்சேரியை நிறுத்தக் கூறியுள்ளனர். இதனால் ஏ.ஆர்.ரஹ்மான் பாதியிலேயே மேடையின் பின்பக்கம் வழியாக வெளியேறினார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையையாகி உள்ளது.