விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி விளையாட்டு வகுப்புகளை கடன் வாங்காதீர்கள் என கணித ஆசிரியர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பேசியபோது, “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு இந்திய அரசுக்கு வழிகாட்டும் வகையில் செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி முதல் வாசிப்பு இயக்கம் வரை 50க்கும் மேற்பட்ட முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது, கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் விளையாட்டு வகுப்புகளை கடன் வாங்காதீர்கள், முடிந்தால் கணித வகுப்புகளிலும் மாணவர்களை விளையாட வைக்க முயற்சி செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.