துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்த போது அவர் தங்கியிருந்த பங்களாவுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், குடியேற போவதாக தகவல் வெளியாகி உள்ளன.

உதயநிதி ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன் திமுக எம்எல்ஏவாக இருந்தவர் இளைஞர் நலன் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர் உதயநிதியை சந்திக்க துறை சார்ந்த அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் தினமும் வருவதால் அமைச்சர்களுக்கான அரசு பங்களாவில் குடியேற உதயநிதி முடிவு செய்துள்ளார். துணை முதல்வராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது தங்கி இருந்த குறிஞ்சி பங்களாவில் குடியேற போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அவர் விரைவில் துணை முதல்வராகவும் பதவி ஏற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
Related posts:
மத்திய அரசு எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிக்காது - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால...
பாரத் மாதா கி ஜே' கோஷத்தை அஜிமுல்லாகான் என்ற இஸ்லாமியர் உருவாக்கினார்,
ரூ 1000 கோடி மதிப்பிலான திட்டம் 2025ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வரும்.
முடிந்தது 'லிங்கா' பிரச்சினை: தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு !



