கதையே இல்லாமல் படம் இயக்கும் பார்த்திபன்!

Filed under: சினிமா |

Parthiban-Manitha-Neya-Mandram‘கதை, திரைக்கதை, வசனம்’ என்ற படத்தை எழுதி இயக்கும் பார்த்திபன் இந்த படத்தில் கதையே இல்லை. தலைப்பில் மட்டுமே கதை இருக்கிறது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. இடைவேளை வரை படத்தை பார்த்துவிட்டு மீதி நிகழ்வுகளை யாராவது சரியாக சொல்லிவிட்டால் ரூ. ஒரு கோடி பரிசளிக்கத் தயார் என்று சவால்விட்டார் பார்த்திபன்.
தமன், சத்யா, அல்போன்ஸ் ஜோசப், ஷரத், விஜய் ஆண்டனி ஆகிய ஐவரும் தலா ஒரு பாடலுக்கு இசையமைத்திருக்கிறார்கள். நான்கு புது கதாநாயகன்கள், மூன்று புதிய நாயகிகள் ஆர்யா, விஷால், விஜய்சேதுபதி, அமலாபால், டாப்சி, சேரன், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
படத்திற்கு போனோமா கை தட்டினோமா விசில் அடிச்சோமா என்று வந்துகிட்டே இருக்கணும். அதுதான் நல்ல சினிமா என்கிறார் பார்த்திபன்.