கபில்தேவ் நடிப்பதை உறுதி செய்த ரஜினிகாந்த்!

Filed under: சினிமா,விளையாட்டு |

“லால் சலாம்“ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது.

சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்புக்கு பின் திருவண்ணாமலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடந்தது. படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற இஸ்லாமியர் வேடத்தில் நடிக்கிறார். இப்போது படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்துகிறது. ரஜினி சம்மந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கி வருவதாக சொல்லப்படுகிறது. படத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதை உறுதி செய்வது போல ரஜினியும் கபில்தேவ்வும் ஒன்றாக இருக்கும் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றி பதிவிட்டுள்ள ரஜினிகாந்த் “முதன்முறையாக உலகக் கோப்பை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய மரியாதைக்குரிய, அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகவும், கவுரவுமாகவும் கருதுகிறேன்” எனக் கூறியுள்ளார்.