கமலஹாசனின் பிறந்தநாள் பேட்டி!

Filed under: அரசியல்,சினிமா |

நடிகர் கமலஹாசனின் 68வது பிறந்தநாளை இன்று அவரது ரசிகர்களும் அவரது மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கொண்டாடினர். இதையொட்டி ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை சந்தித்த கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார்.

“பிறந்தநாள் கொண்டாடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் பிறந்தநாளை காரணமாக வைத்து மக்களுக்கு நற்பணி செய்ய மேடையமைத்து கொடுக்கிறேன். அமெரிக்கா முதல் குக்கிராமங்கள் வரை பல பகுதிகளிலும் தோழர்கள் நற்பணி செய்து வருகிறார்கள். இதுவரை 68 இடங்களில் பல பள்ளிகளுக்கு கழிப்பறை கட்டுக் கொடுத்துள்ளோம். நாட்டிற்கு கழிப்பறை, மருத்துவமனை, இடுகாடு எல்லாமே முக்கியம்தான். ஆளுனரையோ, மத்திய அரசையோ திருத்த வேண்டும் என்றால் அதற்கு நாட்களாகும். ஆனால் உங்களை என்னால் திருத்த முடியும்” என கூறினார்.