கமலஹாசன் பற்றி வானதி சீனிவாசனின் கருத்து!

Filed under: அரசியல்,சினிமா,தமிழகம் |

பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன் என்று கூறியுள்ளார்.

வரும் 10ம் தேதி கர்நாடக மாநில தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த அழைப்பை ஏற்று அவர் கர்நாடகம் சென்று காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு திரட்ட பிரச்சாரம் செய்ய இருப்பதாக கூறினார். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் கமல்ஹாசன் குறித்து வானதி சீனிவாசன் கூறிய போது ஊழல் கரைப்படிந்த காங்கிரஸ் மற்றும் திமுகவின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் உள்ளார் என்று தெரிவித்தார். கமலஹாசன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகிய இருவரும் கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட போது வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்