கமலுக்கு வில்லனாகும் சத்யராஜ்!

Filed under: சினிமா |

பல வருடங்களுக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசனுக்கு நடிகர் சத்யராஜ் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. “இந்தியன் 2” திரைப்படத்தில் நடிகர் சத்யராஜை நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படுகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2” படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க நடிகர் சத்யராஜை இயக்குனர் ஷங்கர் அணுகியுள்ளதாக சொல்லப்படுகிறது. 1980களில் பல படங்களில் வில்லனாக கலக்கிய சத்யராஜ் கமலுடன் நடித்த “காக்கி சட்டை” திரைப்படம் சத்யராஜுக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுத் தந்தது. ஆனால் அதன் பின்னர் கதாநாயகனாக பல ஆண்டுகள் கலக்கிய சத்யராஜ் இப்போது குணச்சித்திர வேடங்களில் கலக்கி வருகிறார். இந்நிலையில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சத்யராஜ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.