கமல் அளித்த டுவிஸ்டான பதில்!

Filed under: அரசியல்,தமிழகம் |

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் மற்றும் நடிகருமான கமலஹாசன் திமுகவோடு கூட்டணி அமைக்க போறீர்களா என்ற கேள்விக்கு டுவிஸ்ட்டான பதிலை அளித்துள்ளார்.


கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களிலும், உள்ளாட்சி தேர்தல்களிலும் மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக கமலஹாசன் போட்டியிட்டார். ஆனால் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ஈரோடு கிழக்கில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கவில்லை. மேலும் கமல்ஹாசன் தனது கட்சி ஆதரவை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வழங்கினார். இதனால் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யமும் இணைய உள்ளதாக பேச்சுகள் எழத் தொடங்கியுள்ளது. இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மு.க.ஸ்டாலின் புகைப்பட தொகுப்பு கண்காட்சி தொடங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் இக்கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியபோது, “தமிழகத்தின் மிகச்சிறந்த அரசியல் தலைவரின் மகனாகவும், அரசியல் தலைவராகவும் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் வரலாற்று ஆவணங்களாக உள்ளது” என்று பேசியுள்ளார். அப்போது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா? அல்லது திமுகவுடன் கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு அவர் “திமுக உடனான கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. கதையில் சீன் பை சீன் சொன்னால்தான் சுவாரஸ்யமாக இருக்கும். இப்போதே கிளைமேக்ஸுக்கு செல்லக் கூடாது” என கூறினார்.