கருணாநிதியின் பேச்சை சுட்டிக்காட்டிய முதலமைச்சர்!

Filed under: அரசியல்,சென்னை,தமிழகம் |

சென்னை பல்லாவரத்தில் இன்று பிரதமர் மோடி பங்கேற்ற புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களின் தொடக்க விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.

2 நாள் சுற்றுப்பயண தென்மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் பிரமர் மோடி. இன்று சென்னைக்கு விமான நிலைய புதிய முனையம், சென்னை – கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை அவர் தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து சென்னை விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதை தொடர்ந்து தமிழ்நாட்டில் புதிய ரயில் மற்றும் சாலை போக்குவரத்து திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றார். சென்னை பல்லாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அஷ்விணி வைஷ்ணவ், ஜோதிர் ஆதித்ய சிந்தியா, நெஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, அமைச்சர் தா.மொ. அன்பரசன், திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு முதலில் நன்றி சொல்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க வந்து உள்ளார் பிரதமர் மோடி. பல்வேறு இனங்களை சார்ந்த பல மொழிகளை பேசு மக்கள் பரந்து வாழும் பன்முகத்தன்மை கொண்டு வாழும் மாநிலங்களை கொண்ட இந்திய துணைக் கண்டத்தின் ஒன்றிய அரசானது மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை தொடர்ந்து தொய்வின்றி நிறைவேற்றித் தரும்போதுதான் ஒட்டுமொத்த இந்தியாவும் வளம்பெறும்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வகுக்கப்பட்ட கூட்டாட்சி கருத்தியலும் செழிக்கும். அந்த அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு தேவையான கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திராவிட மாடல் அரசும் முனைப்போடு முயன்று வருகிறது. நெருக்கடியான நிதிநிலை கூழல் இருக்கும்போதிலும் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றபோதிலும் சாலைகள் மற்றும் பாலங்களுக்கான மூலதன செலவாக இருந்த ரூ.33,068 கோடியை இந்த ஆண்டு ரூ.44,365 கோடியாக உயர்த்தி உள்ளோம். சென்னை 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டம், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்க்ளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும். ஒன்றியத்தில் உண்மையான கூட்டாட்சி இருக்க வேண்டும் என்றால் மாநிலத்தில் சுயாட்சி தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பதை எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் கருணாநிதியும் வலியுறுத்தி வந்தார்கள். ஒரு மண்டபத்தின் மேல் பகுதியில் அனைத்து வலுவையும் வைத்துவிட்டு, பலமற்ற தூண்களை மண்டபத்தை தாங்குவதற்காக வைப்பது கேலிக்கு உரியது அல்லவா? என்று கருணாநிதி கேட்டார். மக்களுக்கு நெருக்கமானது மாநிலங்களாக இருப்பதால் மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநிலங்களுக்கே அதிகம் உள்ளது. எனவே மாநிலங்களுக்கு நிதி தேவையும், மாநில மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் ஒன்றிய அரசின் ஒத்துழைப்பு மிக மிக தேவை. இந்திய பிரதமரும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர் என்பதால் எனது கோரிக்கையின் உள்ளீட்டை அவர் உணர்வார் என்று நம்புகிறேன்” என்று கூறி அவர் தனது ஊரையை நிறைவு செய்தார்.