கருணாநிதி பேனாவுக்கு மெரினா நடுவில் சிலை!

Filed under: அரசியல் |

கருணாநிதியின் பேனாவுக்கு மெரினா கடலின் நடுவே ரூ.80 கோடியில் சிலை வைக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வடிவத்தில் மெரினா கடலுக்கு நடுவே ரூபாய் 80 கோடி செலவில் 134 அடி உயரத்தில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிட வசதியாக 650 மீட்டர் கண்ணாடி பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இத்திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளதாகவும் இத்திட்டத்தின் பணி விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.