கருத்துக் கணிப்புகள் பொய்; ப சிதம்பரம்!

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சியினருக்கும் படிப்பினைதான். சில் மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்கு படிப்பினையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர், “நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம் அதில் மோடிக்கு என்ன பிரச்னை? தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும், வாக்குப்பதிவு இயந்திரத்தை செம்மை படுத்த வேண்டும் என்றும், விவிபேட் இயந்திரத்தில் இருந்து வரும் ஒப்புகை தாளை, வாக்காளர்கள் எடுத்து பார்த்துவிட்டு பெட்டியில் போடலாம் என்பது தான் காங்கிரசின் கோரிக்கை, இன்னுமும் மக்கள் ஈவிஎம் இயந்திரத்தை சந்தேகிக்க தான் செய்கிறார்கள்” என்று ப சிதம்பரம் தெரிவித்தார்.