கருப்பு பெட்டியை ஆராய்ந்தபோது திட்டமிட்டு விமான விபத்து நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீனாவில் கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி குவாங்சி மாகாணத்தில் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்திற்கு உள்ளானது. இந்த விமான விபத்தில் விமானத்தில் சென்ற 132 பேரும் உயிரிழந்தனர். இந்த விமானத்தில் இருந்த கருப்புப் பெட்டிகளை கண்டுபிடிக்கப்பட்டு அமெரிக்க புலனாய்வு துறையால் ஆய்வு செய்யப்பட்டது. அதில் விமானத்தில் விபத்திற்கு முன் எந்த பழுதும் ஏற்படவில்லை என்றும், விமானத்தை இயக்கியவர்களில் யாரேனும் ஒருவர் திட்டமிட்டே விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.