வைரத்தின் மேல் பெரும்பாலும் அனைவருக்குமே மோகம் அதிகமாகவே உள்ளது. வைரத்தால் ஆன ஆபரணங்களை அணிந்து கொள்வது வழக்கமாக இருந்தாலும் வைரம் பதிக்கப்பட்ட பற்களை நாம் கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? கேட்கும்போதே ஆச்சரியமாக இருக்கிறதா?

குஜராத் மாநில சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரிகள் தங்கம், வைரம் பதிக்கப்பட்ட பற்களை தயாரித்து வருகின்றனர். பற்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தாடையையுமே அவர்கள் தத்ரூபமாக செய்து அசத்துகின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வைரம் பதிக்கப்பட்ட பற்களை பொருத்திக்கொள்வது தற்போது புதிய பேஷனாகி வருகிறது. இந்த பல்செட்டின் விலை பல லட்சங்கள் என்பதால், அனைவராலும் இதனை வாங்கி அணிந்து கொள்ள முடியாது.
Related posts:
அமெரிக்காவில் 5.87 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு - அதிர்ச்சி தகவல்!
நீருக்கடியில் மெட்ரோ ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர்.
தூத்துக்குடி கவுன்சிலர் வீட்டில் தேநீர், பொதுமக்களுடன் செல்ஃபி: நடைப்பயணத்தின்போது கனிமொழி கருணாநிதி...
7 ஆண்டுகளுக்குப் பிறகு டீசல் விலை குறைகிறது: கச்சா எண்ணெய் விலை சரிவால் மத்திய அரசு முடிவு !



