கரையை கடந்தது புயல்!

Filed under: இந்தியா,தமிழகம் |

ரீமால் புயல் வங்கதேசம், மேற்குவங்கம் கடற்கரையை ஒட்டிய சாகர் தீவுகளுக்கும் கேபுபாராவுக்கு இடையே கரையை கடந்தது. தமிழகத்தில் 9 துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்றிரவு 10.30 முதல் 12.30 மணி வரை தீவிர புயலாக கரையை கடந்தது என தெரிவித்துள்ளது. இந்த புயல் கரையை கடந்த போது மணிக்கு 110 – 120 கிலோமீட்டர் வேகத்திலும், அவ்வப்போது 135 கிலோமீட்டர் வேகத்திலும் சூறைக்காற்று வீசியது. ரீமால் புயலின் தாக்கத்தால் மேற்குவங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டதாகவும், சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப்பணிகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கு வங்கக்கடலில் உருவான ‘ரெமல் புயல்’ கரையை கடந்த நிலையில் 9 துறைமுகங்களுக்கு விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் ஏற்றப்பட்ட 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டுள்ளது.