நிர்மலா சீதாராமன் உலக நாடுகளுக்கு அழைப்பு!

Filed under: இந்தியா,உலகம் |

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஜி டெக்னாலஜி வேணுமா.. நாங்க தர்றோம்..! என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியாவில் 5ஜி சேவைக்கான ஏலம் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில் 5ஜி சேவையை தொடங்க முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை உரிமத்தை ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா, அதானி நெட்வொர்க் உட்பட்ட நிறுவனங்கள் ஏலத்தில் எடுத்துள்ளன. இந்த தீபாவளி முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் 5ஜி சேவையை தொடங்க ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 5ஜி சேவைக்கான தொழில்நுட்பங்கள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 5ஜி சேவையை விரிவுப்படுத்த தொலைதொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக செயல்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது குறித்து பேசியுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “2024ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை வந்துவிடும். முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள 5ஜியை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளவும் தயாராகவுள்ளோம். இந்தியாவின் சாதனையை நினைத்து பெருமைப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.