மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

அதிமுக வேட்பாளர் கர்நாடக மாநிலத்திலுள்ள புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக எடப்பாடி பழனிசாமி நிறுத்திய புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ் மேலும் ஒரு தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அதிமுகவின் இரு அணிகளும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் நேருக்கு நேர்கோட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related posts:
#BREAKING: தமிழகத்தில் இன்று 6,988 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!
ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தின் பின்பக்க டயரில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு.
கடல் அலையில் சிக்கி பலியான ஐந்து மருத்துவ மாணவர்களுக்கு கன்னியாகுமரி மாவட்டம் அரசு மருத்துவக் குழு ம...
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஏற்பட்டால் அதனை தடுக்க தமிழக அரசு ரெடி - அமைச்சர் விஜயபாஸ்கர்!



