கர்நாடக தேர்தலில் போட்டியிடும் ஓபிஎஸ்!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

மே மாதம் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான பாஜக மற்றும் எதிர்க்கட்சி காங்கிரஸ் ஆகியவை போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன.

அதிமுக வேட்பாளர் கர்நாடக மாநிலத்திலுள்ள புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். கர்நாடக சட்டசபை தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. முதல் கட்டமாக எடப்பாடி பழனிசாமி நிறுத்திய புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளரை அறிவித்த ஓபிஎஸ் மேலும் ஒரு தொகுதிக்கு வேட்பாளர் அறிவிப்பார் என்று கூறப்படுகிறது. அதிமுகவின் இரு அணிகளும் கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் நேருக்கு நேர்கோட்டியிடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.