கர்நாடக பாஜகவில் அதிரடி மாற்றம்!

Filed under: அரசியல்,இந்தியா |

முக்கிய பொறுப்பில் இருந்த பாஜக நிர்வாகிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக சி.டி.ரவி பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணியின் மகன் அனில் ஆண்டனி, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் தாரிக் மன்சூர் உள்ளிட்டோர் தேசிய துணைத் தலைவர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநில பாஜக முன்னாள் தலைவர் பண்டி சஞ்சய், உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர் ராதா மோகன் அகர்வால் ஆகிய இருவரும் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்னர். கர்நாடகாவை சேர்ந்த சி.டி.ரவி, அசாம் எம்.பி. திலீப் சைகியா, மேற்கு வங்கத்தை சேர்ந்த திலீப் கோஷ் போன்ற பல தலைவர்கள் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் வரும் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.