கலிபோர்னியாவில் சூறாவளி புயல்!

Filed under: உலகம் |

அமெரிக்கா மாகாணத்தில் உள்ள கலிபோர்னியாவில் புயல் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் தென்கிழக்கு ஆப்பிரிக்காவின் மலாவி நாட்டில் பிரெட்டி புயல் கடும் பாதிப்புகளையும்,300க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. அமெரிக்க நாட்டில், கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளி புயலால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கலிபோர்னியாய சக்திவாய்ந்த புயல் தாக்கி கடும் சேதங்களை ஏற்படுத்தியது. இதில், வீடுகளைச் சுற்றிலும் வெள்ள நீர்சூழ்ந்து கொண்டுள்ளது. இதனால், பலரும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து தககவல் அறிந்த மீட்புப் படையினர், விரைந்து சென்று, அப்பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, சாலையில், பல அடிகளுக்கு நீர் தேங்கியுள்ளதால், கார்கள் மிதந்து வருகின்றனர். இதனால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், மீட்புப் பணியும் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.