கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முதல் பட்டியல் எப்போது?

Filed under: அரசியல்,தமிழகம் |

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று திமுக தேர்தலுக்கு முன்பு அறிவித்திருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவித்தது

அதுமட்டுமின்றி அதற்கான விண்ணப்பங்களும் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது இந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளின் முதல் பட்டியல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்காக விண்ணப்பம் கொடுத்தவர்களிடம் வீடு வீடாக சென்று விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளதாகவும் இந்த பணிகள் இன்னும் ஒரு சில நாட்களை முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது