கல்லூரி பேருந்து கவிழ்ந்து விபத்து!

Filed under: இந்தியா |

மாணவர்கள் சுற்றுலாவுக்கு சென்ற பேருந்து கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டு 40 பேர் காயமடைந்துள்ளனர்.

டில்லி பல்கலைக்கழக மாணவர்கள், ஆறு ஒருங்கிணைப்பாளர்கள் என மொத்தம் 44 பேர் மணாலிக்குச் சுற்றுலா பயணம் சென்றனர். அவர்கள் சென்ற பேருந்து இன்று பிலாஸூர் அருகே சண்டிகரிலிருந்து மணாலி சாலையில் சென்று கொடிருக்கும்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தை அடுத்து, பேருந்தின் டிரைவரும் கண்டக்டரும் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் மாணவர்களை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த விபத்தில், 1 மாணவர் பலியானார். 40 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.