கல்லூரி மாணவி சத்யா மரணம் குறித்து வைரமுத்து டுவிட்!

Filed under: சென்னை |

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்பவர் கல்லூரி மாணவி சத்யா என்பரை ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், “ஒரு தங்க மான்குட்டியைத் தண்டவாளத்தில் தள்ளினான் ஒரு பேய்மகன்”- என பதிவிட்டுள்ளார்.

சதீஷ் கைது செய்யப்பட்டு விடிய விடிய விசாரணை செய்யப்பட்டதில் காதல் தோல்வி காரணமாக அவர் ஆத்திரத்தில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளியானது. இதையடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.