கல்வி அலுவலரின் முக்கிய அறிவிப்பு!

Filed under: சென்னை |

முதன்மை கல்வி அலுவலர் சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படுமா என்பது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கனமழை காரணமாக தொடர் விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து ஒவ்வொரு சனிக்கிழமையும் பள்ளி கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து அந்த விடுமுறைகளை ஈடு செய்யும் விதமாக நாளை அதாவது பிப்ரவரி நான்காம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சற்றுமுன் அறிவித்துள்ளார்.