கள்ளக்குறிச்சி கலவரம்!

Filed under: தமிழகம் |

கள்ளக்குறிச்சியில் கனியாமூரில் செயல்பட்டு வரும் சக்தி மெட்ரிக் தனியார் பள்ளியில் படித்த 12ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி பள்ளி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் இறப்பு பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனது மகள் குறித்து வழங்கு தொடர்ந்துள்ளனர். மாணவியின் இறப்புக்கு நியாயம் வேண்டி அப்பகுதியில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. போராட்டம் கலவரமாக மாறியது. கலவரத்தில் பள்ளி வளாகம் முழுவதும் தீப்புகையுடன் காட்சியளித்தது. பள்ளி முழுவதும் சூறையாடப்பட்டது. பள்ளி வாகனங்களும், போலீசாரின் வாகனமும் தீயிட்டு கொளுத்தப்பட்டது. கலவரத்தால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்பகுதி முழுவதிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் காவல் துறையை நோக்கி நீதிபதி, “மாணவியின் இறப்புக்கு காரணம் என்ன? போராட்டம் நடத்த அனுமதி தந்தது யார்? சட்டத்தை யாரும் கையில் எடுக்க முடியாது. பள்ளியில் பயின்ற 4500 மாணவர்களின் நிலை என்ன? இது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை என்றே தெரிகிறது” என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் கள்ளக்குறிச்சியில் சூறையாடப்பட்ட பள்ளியில் படித்த மாணவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர்களிடம் பேசியுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் “கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களை அருகேயுள்ள அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். இன்று ஜனாதிபதி தேர்தல் முடிந்ததும் கள்ளக்குறிச்சி சென்று ஆய்வு நடத்த உள்ளேன். கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி இறப்பு விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம்” என கூறியுள்ளார்.