கள்ளச்சாராயம் குறித்து கார்த்தி சிதம்பரம்!

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அதிகாரிகள், போலீசாருக்கு தெரியாமல் கள்ளச் சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

இவர் இன்று மானாமதுரையில் செய்தியாளர்களிடம், “போலீசுக்கு தெரியாமல் கள்ளச்சாராயம் விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே தெரியாமல் இருந்தால் ஒரே நாளில் கள்ளச்சாராயம் விற்ற 1500 பேரை எப்படி கைது செய்திருக்க முடியும். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகள் தான் கள்ளச்சாராயத்தை குடித்து இறந்துள்ளனர். அவர்களுக்கு இழப்பீடு வாங்குவது தவறில்லை. பாஜக வெற்றி பெற்றால் தேசியவாதம் ஜெயித்தது, மற்ற கட்சி வெற்றி பெற்றால் பிரிவினை வாதம் ஜெயித்தது என்று கூறுவது அபத்தமான கருத்து. கர்நாடகாவில் ஊழல் ஆட்சிக்கும், பிரிவினைவாத அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.