கள்ள நோட்டு அச்சடிப்பு: 3 பேர் கைது!

Filed under: தமிழகம் |

மிக நூதனமாக முறையில் வெளியே பேன்சி ஸ்டோர் வைத்து உள்ளே கள்ள நோட்டு அச்சடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் பேன்சி ஸ்டோர் இயங்கி வருகிறது. கடையில் வேலை செய்யும் அண்ணாதுரை கோழி வாங்க சென்றுள்ளார். அப்போது அவர் கொடுத்த ஐநூறு ரூபாய் நோட்டு சற்று வித்தியாசமாக இருந்ததையடுத்து கோழிக்கடைக்காரர் சந்தேகமடைந்து காவல்துறையினர்களிடம் அவரை பிடித்து கொடுத்தார். காவல்துறையினர் அவரிடம் விசாரணை செய்தபோதுதான் பேன்சி ஸ்டோரில் கள்ள நோட்டு அச்சடிப்பதற்கு தனி அறை உள்ளது என்பது தெரிய வந்தது. இதையடுத்து பேன்சி ஸ்டோரை உடனே சோதனை செய்தபோது கலர் பிரிண்டர் செல்போன் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கடையின் உரிமையாளருக்கு கடன் இருப்பதால் அந்த கடனுக்காக தனி அறை அமைத்து கள்ள நோட்டை தயார் செய்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து அக்கடையின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்