கவர்ச்சிக் கன்னிகளுடன் ஜி.வி.பிரகாஷ் கும்மாளம்!

Filed under: சினிமா |

GV-Prakash-Nikki-Galrani-Darling-Tamil-Movie-Stills-8‘டார்லிங்’ படம் பொங்கலுக்கு வெளியாகி எதிர்பாராத வெற்றியுடன் வசூலில் சக்கைப்போடு போடுகிறது. இதில் கதாநாயகனாக அறிமுகமான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். அடுத்து பிரகாஷ் நடிக்கும் படத்தின் பெயர் இலியானா நயன்தாரா திரிஷா. பெயரே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது. அதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். திரிஷாவும் நயன்தாராவும் கவுரவ வேடம் ஏற்கிறார்கள். கயல் ஆனந்தி ஒரு ஜோடி. இன்னொருவருக்காக பல கவர்ச்சியான மாடல் அழகிகளை இன்டர்வ்யூ நடத்துகிறார், பிரகாஷ். ஸ்ரீதேவியும் பாரதிராஜாவும் முக்கிய வேடங்களில் நடிப்பதும் கூடுதல் தகவல்.