காங்கிரஸ் எம்.பி.யின் வேண்டுகோள்!

Filed under: அரசியல் |

காங்கிரஸ் எம்.பி பிரான்சிஸ்கோ ராகுல் காந்தி உடனடியாக ஒற்றுமை நடைபயணத்தை நிறுத்திவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செய்தார். அதன்பின் ஒற்றுமை நடை பயணத்தை தொடர்ந்துள்ளார். இந்நிலையில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் போன்ற பகுதிகளில் மக்களிடையே ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ராகுல்காந்தியின் பிரச்சாரத்தால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும். எனவே அவர் ஒற்றுமை நடை பயணத்தை நிறுத்திவிட்டு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி பிரான்சிஸ்கோ என்பவர் கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் ராகுல் காந்தி தனது ஒற்றுமை நடை பயணத்தை தொடர்ந்து நடத்த விரும்புவதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர்.