காங்கிரஸ் தலைமையில் மெகா கூட்டணியா?

Filed under: அரசியல்,இந்தியா |

இன்று டில்லியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சோனியா காந்தியை சந்திக்க இருப்பதாகவும் பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைப்பது குறித்து அவர் ஆலோசனை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரயிருப்பதையொட்டி, பாஜக கூட்டணிக்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக திட்டமிட்டுள்ளனர். இவ்வாறான ஒரு முயற்சியில் ஈடுபட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் இன்று டில்லி சென்றுள்ளார். அவர் சோனியா காந்தி உள்பட பல தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒரே கூட்டணியில் வலுவாக தேர்தலில் போட்டியிட அவர் விரும்பும் கூறப்படுகிறது. ஏற்கனவே அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட பல தேசிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டுவதில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் ஒன்றுபட்டால்தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்றும் நிதேஷ்குமார் கூறியுள்ளார்.