காங்கிரஸ் ரூட்டில் பயணமாகும் பா.ஜ.க.!

Filed under: அரசியல்,இந்தியா |

14611781192_7afd00a70e_mதற்போது உலக அளவில் தீவிரவாதம் அரக்கத்தனமாக முன்னேறி உள்ளதாக கூறுகிறார்கள். எதிரிநாட்டு வீரர்களை வெல்லாமல், உலக மக்களை அதாவது வெளிநாட்டு விமான பயணிகளை சுட்டு வீழ்த்தும் அவலம் தொடர்ந்து மலேசியா நாடு இருமுறை அவதிப்பட்டு நிற்கிறது. இறைவனின் ஆணை என்று கூறி செயல்படும் இந்த தீவிரவாதிகளை மதசார்பற்ற தன்மை என்ற வீரகிரீடம் சூடி ஊக்குவிக்கும் அரசியல்வாதிகள் அதிகம் என்கிறார்கள்.
கடவுள் இல்லை என்ற நாத்திகவாதம் பேசும் அரசியல் கயவர்கள், இறைவன் பெயரைக்கூறி தீவிரவாதத்தில் ஈடுபடும் இவர்களை ஊக்குவித்து ஆதரவு கொடுக்கிறார்களாம். வாக்கு வங்கிக்கு பயந்து தீவிரவாதிகளை ஆதரிக்கும் இந்திய கட்சிகளை தூக்கில் நிறுத்த ஆவேசப்படுகிறார்களாம். ஒன்றும் அறியாத அப்பாவிகள் சாதி மதம் கடந்து தீவிரவாதிகளின் இலக்குக்கு ஆளாகி, கொத்து கொத்தாக சாம்பலாகி விட்டது கொடுமையிலும் கொடுமை.
சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அனைத்து வங்கிகளையும் தேசியமயமாக்கல் செய்து சாதனை படைத்தார். சென்ற மத்திய அரசு சுயநல நோக்கம் கொண்டு தேசிய வங்கிகளை அலட்சியப்படுத்தி தனியார் வங்கிகளை ஊக்குவித்து கொள்ளை அடித்ததாக கூறப்பட்டது. சென்ற மத்திய அரசுக்கு உதவிய நிதி அதிகாரிகள், தற்போது பா.ஜ.க. சுயநல அரசியல்வாதிகளை வளைத்துப்போட்டு விட்டார்களாம். தற்போதைய நிதி அமைச்சர் தனியார் வங்கிகளுக்கு தேசிய வங்கிகளை அடமானம் வைக்கத் துணிந்து விட்டதாக டெல்லியில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆகமொத்தம் காங்கிரஸ், பாஜக. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்ற கருத்து வெளிப்படுகிறது.
இந்தியா முழுவதும் கற்பழிப்பு அதிகமாக நடக்க ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள். கற்பழிப்பு நடத்திய கயவர்கள் மதசார்பற்ற தன்மை கொண்டவராக இருந்தால், அவர்களுக்கு எதிர்க்கட்சிகள் அதிகம் குரல் எழுப்ப மறுப்பதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உத்திரபிரதேசம், கர்நாடகத்தில் நடந்த கற்பழிப்புகளுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் விளக்கம் கொடுத்த கொடுமை நடந்துள்ளது. காரணம் மதசார்பற்ற தன்மையால் கிடைக்கும் வாக்கு வங்கிகள்.
மேலும் கர்நாடக சட்டசபையில் கற்பழிப்பு விவாதம் நடந்த போது, முதல்வர் சித்தராமையா அசந்து தூங்கியதாக குற்றம் சாட்டுகிறார்கள். மதசார்பற்ற கட்சிகள் கற்பழிப்பு குற்றங்களை வாக்குகள் ஆதரவில் நோக்கி, நடவடிக்கை எடுப்பதாக ஆவேசப்படுகிறார்கள்.
தற்போது இலங்கை ஆந்திர அரசியல்வாதிகளை வளைத்துப்போட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இலங்கை வெளியுறவு அமைச்சர் ஆந்திர முதல்வருடன் கலந்துபேசி, ஆந்திராவில் இலங்கை முதலீட்டை செய்ய உறுதி அளித்துள்ளார். இலங்கை அதிபரின் நண்பராக கூறப்படும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அதற்கு ஆதரவு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் கேரளத்தவர்களும், தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் ஆந்திரர்களும் தமிழக நலன்களுக்கு ஆப்பு அடிப்பதாக தமிழ் உலகம் விம்முகிறது. தமிழ் என்று மார்தட்டும் கயவர்கள், ஆந்திர நிதியை கண்டவுடன் பம்முகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.