“காட்பாதர்” படம் 100 கோடி வசூல்!

Filed under: சினிமா |

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியிருக்கும் “காட்பாதர்” திரைப்படம் ரூ.100 கோடி வசூலை எட்டியுள்ளதால் 100 கோடி கிளப்பில் இணைந்தள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மோகன் ராஜா இயக்கத்தில் “லூசிபர்” திரைப்படம் தெலுங்கில் “காட்பாதர்” என்ற பெயரில் ரீமேக்காக உருவானது. இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்துள்ளார். சிறப்பு வேடத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். அக்டோபர் மாதம் 5ம் தேதி இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதோடு ரூ.100 கோடி பட்ஜெட்டில் ஆர்பி சவுத்ரி மற்றும் என்.வி.பிரசாத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வெளியான நாளில் இன்றுவரை, உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலித்து 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. “ஆச்சார்யா” படத்தின் தோல்விக்குப் பின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீசியின் “காட்பாதர்” படம் வெற்றி பெற்றதுடன் வசூலையும் குவித்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.