“காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்” வசூல் என்ன?

Filed under: சினிமா |

திரையரங்கிற்கு மக்கள் வருவது கடந்த வாரம் குறைந்துள்ளது. கடந்த வாரம் தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் ரிலீசாகின. ஆனால் எந்த படமும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதில் மாஸ் ஹீரோ, மாஸ் இயக்குனர் என பெரிய பட்ஜெட்டில் ரிலீசான படம்தான் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்.”

“விருமன்” வெற்றிக்குப் பின் இயக்குனர் முத்தையா ஆர்யாவை கதாநாயகனாக்கி இந்த படத்தை இயக்க, ஜி ஸ்டுடியோஸ் பைனான்ஸில் ட்ரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த படம் கடந்த வாரம் ரிலீசானது. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரிலீசாகி மூன்று நாட்களில் உலகம் முழுதும் வெறும் 4 கோடி ரூபாய் அளவுக்குதான் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக ரிலீசான எந்த படமும் பெரியளவில் வசூல் செய்யவில்லை.