காதலிக்கு தொல்லை கொடுத்ததால் இளைஞர் கொலை!

Filed under: இந்தியா |

காதலிக்கு திருமணம் ஆனபிறகும் தொல்லை கொடுத்ததால் தெலுங்கானா மாநிலத்தில் லாரி ஓட்டுனர் பட்டப்பகலில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சிரியாவாலா மாவட்டம் இந்தரம் கிராமத்தில் வசித்து வரும் கனகய்யாவின் மனைவி பத்மா. இத்தம்பதியர்க்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். மூத்த மகளும் அதேபகுதியைச் சேர்ந்த மகேஷ் என்றவரும் காதலித்து வந்தனர். இவர்கள் காதலித்தபோது, வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கடந்தாண்டு அப்பெணுக்கு வேறொருவருடன் திருமணம் நடைபெற்றது. இருப்பினும் மகேஷ் அப்பெண்ணுக்கு தொடர்ந்து செல்போனில் தொல்லை கொடுத்து வந்ததுடன், அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களைக் காட்டி மிரட்டி வந்துள்ளார். இந்தப் புகைப்படங்களைப் பார்த்த அப்பெண்ணின் கணவன் கடந்த மாதங்களுக்கு முன்பு அப்பெண்ணை விவாகரத்து செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. மகேஷ் தன் இருசக்கர வாகனத்தில் அப்பெண்ணின் வீட்டிற்கு முன் வந்துள்ளார். அவரை வழிமறித்து தாக்கியதால், பெண்ணின் குடும்பத்தினர் 4 பேர் அவர் மீது கல்லை தூக்கிப் போட்டு கொன்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.