காதலியின் கழுத்தை அறுத்த காதலன்!

Filed under: தமிழகம் |

காதலியின் கழுத்தை அறுத்துவிட்டு காதலன் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது.

திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக 21 வயது சத்தியஸ்ரீ என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கும் 25 வயதில் நரேந்திரன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளாக நட்பு இருந்ததாகவும் அதன் பின் இருவரும் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் திடீரென இருவருக்குமிடையே சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இன்று காலை சத்தியஸ்ரீ பணிபுரியும் மருத்துவமனைக்கு வந்த நரேந்திரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததாகவும் அப்போது ஒரு கட்டத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சத்தியஸ்ரீயின் கழுத்தில் திடீரென அறுத்ததாகவும் பின்னர் தானும் தன்னுடைய கழுத்தையும் அறுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.