காதலில் சிக்கிய நடிகைகளின் மார்க்கெட் ‘அம்பேல்’!

Filed under: சினிமா |

tamaகாதலில் சிக்கிய நடிகைகள் உடனே கழுத்தில் தாலியை வாங்கிக்கொண்டு திருமணமாகி செட்டில் ஆகிவிடவேண்டும். இல்லாவிட்டால் காதலில் சிக்கிய நடிகைகள் எப்போது திருமண பந்தத்தில் சிக்கி படப்பிடிப்புக்கு கல்தா கொடுத்து விடுவார்களோ என்று தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அச்சப்படுவது இயல்பு. காதல் வயப்பட்ட நடிகைகளை ஜோடியாக நடிக்க வைப்பதற்கும் நட்சத்திர நடிகர்கள் தயங்குவார்கள்.

இப்போது விஷால் காதல் வலையில் சிக்கிய ஓவியாவுக்கு படமில்லாததால் சொந்த ஊரான கேரளாவுக்கே திரும்பிவிட்டார். சித்தார்த்துடன் கிசுகிசுக்கப்பட்ட சமந்தாவுக்கும் புதிய படம் எதுவும் ஒப்பந்தமாகவில்லை. சிம்புவைக் காதலிக்கும் ஹன்சிகா மொத்வானியை ஒப்பந்தம் செய்ய இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர். ஹன்சிகாவின் இமேஜூம் தவிடுபொடியானது. கார்த்திக்குடன் கிசுகிசுக்கப்பட்டதால் தமன்னாவுக்கு தமிழ்ப்படமில்லை.