காதலில் தோற்றாலும் திருமணம் அவசியம்!

Filed under: சினிமா |

காதல் தோல்வியால் வாழ்க்கை தோல்வியாகக் கூடாது. தோல்வியை வெற்றியின் முதல் படியாகக் கொள்ளவேண்டும். காதல் தோல்வியடைந்தவர்கள் கண்டிப்பாக திருமணம் செய்து, மனைவியைக் காதலித்து வாழ்க்கையை இனிமையாக்க வேண்டும்.
நயன்தாராவும் ஜெய்யும் காதலிக்கிறார்கள். ஜெய்யின் தந்தை எதிர்ப்பு தெரிவித்ததால், சொல்லாமல் கொள்ளாமல் ஜெய் அமெரிக்கா பறக்கிறார். ஆர்யாவும் நஸ்ரியாவும் காதலித்து திருமணம் செய்த சில நாட்களில் நஸ்ரியா ஆர்யாவின் கண் எதிரே விபத்தில் இறக்கிறார். சூழ்நிலைக்கட்டாயத்தில் நயன்தாரவை மணக்கிறார் ஆர்யா. ஒருவரை ஒருவர் பிடிக்காமல் வாழ்ந்து விவாகரத்து செய்யும் முடிவுக்கு வரும்போது மனமாற்றம், விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் உணர்ச்சிமயமான யதார்த்த வழியில் இயங்கிய அட்லி வாழ்க்கையை பிரதிபலித்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நஸ்ரியாவை மிஞ்சிவிடுகிறார், நயன்தாரா! அட்டகாச நடிப்பால் மனதை அதிரவைக்கிறார். இந்தப்படத்தில் ஜெய் பயந் தாங்கொள்ளியாக வாழ்ந்து மிரட்டிவிட்டார். பின்பாதி ஜவ்வு. காதல் தோல்வியடைந்தவர்களுக்கு மிகச்சிறந்த வலிநிவாரணி, ‘ராஜாராணி’.