“காத்து வாக்குல காதல்” டிரெய்லர்!

Filed under: சினிமா |

முக்கோண காதல் கதை “காத்து வாக்குல ரெண்டு காதல்.” இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. தமிழில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.

 

இந்நிலையில் தற்போது மற்ற மொழிகளிலும் ப்ரமோஷன் பணிகள் நடந்துவரும் நிலையில் தமிழைத் தவிர மற்ற மொழிகளில் “ரிஸிரி” என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் மையக் கதாபாத்திரங்களான காதிஜா, ராம்போ, கண்மணி ஆகிய பெயர்களின் ஆங்கில எழுத்துகளை தலைப்பாக வைத்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. சமந்தா மற்றும் நயன்தாரா இருவரையும் ஒரே நேரத்தில் காதலிக்கும் விஜய் சேதுபதி சந்திக்கும் பிரச்சனைகளை ஜாலியாக சொல்கிறது இந்த டிரெய்லர். இதனால் ரசிகர்கள் மத்தியில் படத்தைப் பார்க்கும் ஆவல் அதிகரித்துள்ளது.