காயத்ரி ரகுராம் திமுகவை சாடல்!

Filed under: அரசியல்,தமிழகம் |

பாஜக கட்சியைச் சேர்ந்தவரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் இனிமேல் திமுகவால் ஸ்டிக்கர் ஒட்ட முடியாது: என கூறியுள்ளார்.

மத்திய அரசு ஏற்கனவே அமல்படுத்திய திட்டங்களைத்தான் திமுக அறிவிக்கிறது. அப்படி அறிவித்த திட்டங்களில் மேல் திராவிட மாடல் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளதாகவும் பாஜகவினர் கூறி வருகின்றனர். அவ்வகையில் இன்று நடிகையும், பாஜக பிரபலமான காயத்ரி ரகுராம் “இனிமேல் திமுகவால் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. திமுகவால் சமூக நீதி மற்றும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை வெறும் வார்த்தைகளால் மட்டுமே உருட்ட முடியும், செயலில் அல்ல. பிரதமர் மோடியால் மட்டுமே நம் நாட்டுக்கும் மக்களுக்கும் எல்லா வளர்ச்சி சாத்தியமாக்க முடியும்” என்று கூறியுள்ளார்.