காரின் விலை 11 லட்சம், ரிப்பேர் 22 லட்மா?

Filed under: இந்தியா |

பெங்களூருவில் ஏற்பட்ட கனமழையால் பலரது இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதடைந்தது. அதில் ஒருவரது காரின் விலை ரூ.11 லட்சம், ஆனால் காரை ரிப்பேர் செய்வதற்கு ரூ.22 லட்சம் ஆகும் என கார் நிறுவனம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அனிருத் என்பவர் தனது தனது காரை ரிப்பேர் செய்ய கார் நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறார். கார் ரிப்பேர் செய்ய எவ்வளவு கட்டணம் என்று கேட்டதற்கு கார் நிறுவனம் 22 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறியுள்ளதாக தெரிகிறது. தனது காரின் விலையே 11லட்சம் தான், ஆனால் அந்த காரை ரிப்பேர் செய்வதற்கு பதில் 2 புதிய கார்கள் நான் வாங்கி விடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கார் நிறுவனம் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் தரப்பில் சந்தித்த அவலங்களையும் தன்னுடைய பதிவில் பகிர்ந்து உள்ளார்.