ராகுல் காந்தியை எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அவர் இன்று பாராளுமன்றத்திற்கு வந்தபோது காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் அவரது கையை குலுக்கி வரவேற்று பேசினர்.
எதிரே வந்த கார்த்திக் சிதம்பரம் ராகுல் காந்தியின் கையை கொடுக்க கையை நீட்டிய போது ராகுல் காந்தி அவரை கண்டுகொள்ளாமல் சென்றார். இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. கார்த்திக் சிதம்பரம் மற்றும் ப சிதம்பரம் ஆகியவர்கள் மீது ராகுல் காந்தி அதிருப்தியில் இருப்பதையே இது காட்டுகிறது என்று கூறப்படுவதால் தமிழக காங்கிரஸ் வட்டாரத்தில் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ப சிதம்பரம் மீது ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி அதிருப்தியில் இருப்பதாகவும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ப சிதம்பரத்திற்கு வாய்ப்பு கொடுப்பது கஷ்டம்தான் என்றும் கூறப்படுகிறது.