கால்நடைதுறை அலுவலக கைகலப்பில் ஈடுபட்ட மூவர் சஸ்பெண்ட் !

Filed under: தமிழகம் |

நாகப்பட்டினம், மே 27

நாகப்பட்டினம் கால்நடை துறையின் இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனராக கணேசன் வேலை பார்த்து வருகிறார். வேதாரண்யம் அருகே உள்ள கத்தரி புலம் கால்நடை மருத்துவர் ராஜா என்பவர் உதவி இயக்குனரிடம் கடந்த 20/05/2020 அன்று தனக்கு வேலையின் ஊதிய சான்றிதழ் கேட்டுள்ளார், இரண்டு நாட்கள் கழித்து தருவதாக கூறினாராம்.

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடைபெறும் போது அங்கு வேலை பார்க்கும் கிளார்க் செல்வராஜ் இருவரையும் சமாதானம் செய்யும்போது ராஜா செல்வராஜ் மீது தாக்குதல் நடத்தி, மருத்துவமணையில் சேர்ந்துள்ளார். உதவி இயக்குனர் கணேசன், செல்வராஜ் இருவரும் வெளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர், மருத்துவர் ராஜாவும் புகார் செய்துள்ளார். இப் புகாரினை நாகை டவுன் டி.எஸ்.பி.முருகவேல் விசாரணை செய்து வரும் வேலையில் புகாரில் உள்ள உதவி இயக்குனர் கணேசன் அலுவலக எழுத்தர் செல்வராஜ், கால்நடை மருத்துவர் ராஜா மூவரையும் தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளனர்.

கணேசன் கால்நடை துறை மருத்துவராக இருந்த போது திருமருகல் மருத்துவமனையில் கால்நடைகளுக்கு வழங்கப்பட்ட தீவனங்களை வழங்காமல் ஏப்பம் இட்டவர் என்பது குறிப்பிடதக்கது. இது தொடர்பாக நாகை கால்நடை துறை இணை இயக்குனர் சுமதி அவர்களிடம் 944500 1136 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது மேலிடத்தின் உத்திரவுபடி சஸ்பெண்ட் செய்துள்ளோம் என்றார்.