காவலர்களின் சீருடைப்படியை அறிவித்த முதலமைச்சர்!

Filed under: அரசியல்,தமிழகம் |

இன்று முதலமைச்சர் ஸ்டாலின் காவலர்களுக்கு வழங்கப்படும் சீருடைப்படி ஆண்டுக்கு ரூ.4500 என்று அறிவித்துள்ளார்.

இது குறித்து அறிவிப்பில், ஆவடி, தாம்பரம் காவலர்களுக்கு உணவுப்படியாக ரூபாய் 300 வழங்கப்படும். காவலர்களுக்கு எரிபொருள் படி 5 லிட்டர் பெட்ரோலுக்கு ரூபாய் 370லிருந்து 515ஆக உயர்த்தி வழங்கப்படும். சென்னை புறநகரில் புதிதாக மூன்று பெருநகர காவல் நிலையங்கள் ஏற்படுத்தப்படும். காவல்துறையல் சட்ட ஆலோசகர் என்ற பணியிடம் உருவாக்கப்படும். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பெண் காவலர்களுக்கு மகளிர் விடுதி கட்டி தரப்படும். பெண் குழந்தைகள் பாதுகாப்புக்காக சென்னையில் 3000 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். காவலர் அங்காடி வசதியை ஊர்காவலர் படையினருக்கு விரிவுபடுத்தப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.