காவிரி விவகாரம் குறித்து துணை முதலமைச்சர் கருத்து!

Filed under: அரசியல்,இந்தியா |

கர்நாடக அனைத்துக்கட்சி கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படும் என்றும் கர்நாடக மாநில விவசாயிகளின் உரிமையை காக்க சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

காவிரி விவகாரம் குறித்து இன்று கர்நாடக மாநிலத்தில் ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இதில் முதலமைச்சர் துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பேசும் போது, “கர்நாடக மாநில விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் கர்நாடக அரசு எந்த சமரசமும் செய்து கொள்ளாது. காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநில அரசின் உரிமையை காக்க சட்ட போராட்டம் நடத்தப்படும் என்றும் அனைத்து கட்சி தலைவர்களும் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்.