கடந்த இரண்டு நாட்கள் பெய்த கனமழையால் 110 பேர் பலி!

Filed under: இந்தியா |

கடந்த இரண்டு நாட்களாக பீகார் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தில் பல மாவட்டங்களில் இடியுடன் பெய்த கனமழையால் 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த இரண்டு மாவட்டங்களில் பெய்த கனமழையால் பீகாரில் கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் பலியாகியுள்ளனர் மற்றும் 20 பேர் காயம் அடைந்து உள்ளனர். பின்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 12 பேர் காயமடைந்துள்ளனர் என அரசு தெரிவித்துள்ளனர்.

பலியானவர்களில் பல பேர் வயல் வெளிகளில் பணிபுரிந்ததால் இடிதாக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி உதவி கொடுக்கப்படும் என இரு மாநில முதலமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.