கிருத்திகா உதயநிதி டுவிட்டர் பதிவு!

Filed under: சினிமா,தமிழகம் |

கிருத்திகா உதயநிதி “காதலிக்க அஞ்சக் கூடாது..’ என தனது மகனின் புகைப்படம் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இயக்குனரும், அமைச்சர் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில், “காதலிக்கவோ, காதலை வெளியில் சொல்லவோ அஞ்சக்கூடாது. அது இயற்கையின் மகிமையை அறியும் வழிகளில் ஒன்று” என்று பதிவிட்டுள்ளார். உதயநிதி மற்றும் கிருத்திகா தம்பதியின் மகன் இன்பநிதி புகைப்படம் ஒன்றை சர்ச்சைக்குரிய வகையில் இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வரும் நிலையில் அப்புகைப்படம் குறித்து தான் கிருத்திகா உதயநிதி இந்த டுவிட்டை பதிவு செய்துள்ளார் என்று கூறப்படுகின்றது.