கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம்!

Filed under: தமிழகம் |

சுற்றுலா பயணிகள் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட இனி கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகிலுள்ள கீழடி அருங்காட்சியகத்தை காண வரும் பார்வையாளர்களுக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு பதினைந்து ரூபாய், சிறியவர்களுக்கு பத்து ரூபாய் மற்றும் மாணவர்களுக்கு ஐந்து ரூபாய் என்றும் வெளிநாட்டவர்களுக்கு பெரியவர்களுக்கு ஐம்பது ரூபாய் சிறியவர்களுக்கு 25 என்றும் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கீழடி அருங்காட்சியகத்தில் புகைப்படம் எடுக்க முப்பது ரூபாய், வீடியோ எடுக்க 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கீழடி அருங்காட்சியகத்தை இதுவரை இலவசமாக பார்த்து வந்த பொதுமக்கள் தற்போது கட்டணம் வசூல் என்ற தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து அதிருப்தி அடைந்துள்ளனர்.