குஜராத்தில் பாஜகவுக்கு சிக்கல்?

Filed under: அரசியல்,இந்தியா |

சட்டமன்ற தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலத்தில் திடீரென 18 கிராமங்கள் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் பாஜக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி என்ற தொகுதிக்கு உட்பட்ட 18 கிராமங்களை சேர்ந்த மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். தங்கள் கிராமங்களுக்கு அருகில் உள்ள அஞ்செலி என்ற ரயில் நிலையத்தில் ரயில்களை நிறுத்த கோரி நீண்ட வருடங்களாக கோரிக்கை விடுத்து வருவதாகவும் ஆனால் மாநிலத்தில் உள்ள பாஜக அரசு மத்தியில் உள்ள பாஜக அரசும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றாததால் தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த 18 கிராம மக்களும் இதுநாள்வரை பாஜகவுக்கு ஓட்டளித்து வந்தவர்கள் என்பதால் பாஜகவுக்கு இந்த தொகுதியில் பெரும் பின்னடைவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.